ஈரான் போரை நிறுத்துமாறு ட்ரம்ப்புக்கு பாப்பரசர் லியோ வேண்டுகோள்!

ஈரான் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சரியான வழியை கண்டறியுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பாப்பரசர் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த முதல் பாப்பரசரான லியோ, ரோமிற்கு அருகிலுள்ள காஸ்டெல் காண்டோல்போவில் ஊடகவியலாளர்களிடம்  பேசுகையில், “ஜனாதிபதி ட்ரம்ப் போரை நிறுத்த விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். வன்முறையைக் குறைப்பதற்கான வழியை அவர் கண்டறிவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையில், போரை ஆரம்பிப்பவர்களின் கைகள் “இரத்தத்தால் படிந்துள்ளன” எனவும், அவர்களின் பிரார்த்தனைகளை கடவுள் ஏற்பதில்லை எனவும் பாப்பரசர் மிகவும் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் 05 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டும் என அவர் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

“அப்பாவிச் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அமைதிக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *