கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்த நபர் சடலமாக மீட்பு!

இன்று நண்பகல் மட்டக்களப்பு தலைமையாக போலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

பாலத்திற்கு அருகாமையில் கடமையில் இருந்த போக்குவரத்து போலீசாருக்கு அவ் வீதியால் பயணித்த பொதுமக்கள் வழங்கிய தகவலின் பெயரின் அப்பகுதியில் மீன்படியில் ஈடுபட்டிருந்த 2 நன்னீர் மீன்பிடியாளர்களின் உதவியுடன் சடலம் பிற்பகல் ஒரு மணி அளவில் மீட்கப்பட்டுள்ளது

இதன் போது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதேவேளை உயிரிழந்த நபரின் மோட்டார் சைக்கிள் வண்டியும் பாலத்தில் இருந்து மீட்கப்ப்பட்டுள்ளது

40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் தற்போது பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது

இடம்பெற்ற இச்சம்பவம் சம்பந்தமாக மட்டக்களப்பு போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *