மட்டக்களப்பு, மண்முனை பற்று (ஆரையம்பதி) பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக வர்த்தக சங்கத்தினரால் இன்று (26) காலை மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
36 ஆண்டுகாலமாக பொதுச்சந்தையில் மலசலகூட வசதி இல்லாமை.
சுத்தமான குடிநீர் வசதிகள் இன்மை.
வியாபாரம் செய்யப் போதிய இடவசதி இல்லாமை.
அடிப்படை வசதிகள் கோரி பலமுறை முறையிட்டும் தவிசாளர் நடவடிக்கை எடுக்காமை.
ஆரையம்பதி பொதுச்சந்தையிலிருந்து கோஷங்களை எழுப்பியவாறு நடைபயணமாகச் சென்ற வர்த்தகர்கள், மண்முனை பற்று பிரதேச சபை முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
போராட்டத்தின் இடையில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் பிரதேச செயலாளர் ரோகினி விக்னேஸ்வரன் அவர்களைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர். இருப்பினும், அதிகாரிகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச செயலாளரின் பதிலில் திருப்தியடையாத வர்த்தகர்கள், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாளை (27) இதைவிடப் பாரிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துவிட்டுக் கலைந்து சென்றனர்.

