இலங்கையிலுள்ள பிரதான வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (25) சற்று அதிகரித்துள்ளதுடன், விற்பனை வீதம் 317 ரூபா மட்டத்தில் ஸ்திரமாக காணப்படுகின்றது.
அதன்படி, செலான் வங்கியில் (Seylan Bank) டொலரின் கொள்வனவு வீதம் 310.75 ரூபாவிலிருந்து 310.50 ரூபாவாகவும், விற்பனை வீதம் 316.50 ரூபாவிலிருந்து 316.25 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
என்.டி.பி வங்கியில் (NDB Bank) கொள்வனவு வீதம் 310.25 ரூபாவாகவும், விற்பனை வீதம் 316.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மக்கள் வங்கியில் (People’s Bank) டொலரின் கொள்வனவு வீதம் 309.89 ரூபாவாகவும், விற்பனை வீதம் 316.73 ரூபாவாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

