ஈரான் அணுமின் நிலையம் மீண்டும் தாக்குதல்: அமெரிக்கா–இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு!

ஈரானின் புஷேர் அணுமின் நிலைய வளாகத்தில் அமெரிக்கவும் இஸ்ரேலும் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் நேற்று செவ்வாய்க்கிழமை (24) மாலை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 17ஆம் திகதி இதே அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதன் பின்னர், மீண்டும் அந்த அணுமின் நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறுகிற அதேவேளை, இந்தத் தாக்குதலில் தொழில்நுட்ப சேதமோ மனித உயிர்ச்சேதமோ நிதி சேதமோ ஏற்படவில்லை என்றும் நிலையத்தின் எந்தப் பகுதியும் சேதமடையாமல் அப்படியே உள்ளது எனவும் ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பு, இவ்விதமாக அமைதியான முறையில் அணுசக்தி நிலையங்களின் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச விதிமுறைகள் மற்றும் உரிமைகளை மீறுவது மட்டுமன்றி, பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடர்ச்சியாக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதன் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *