அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இக்கொடுப்பனவுகள் எதிர்வரும் 26ஆம் திகதி வழங்கப்பட உள்ளன. முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்காக 3,112,310,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 71,339 முதியோர்களுக்காக 356,695,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகைகள் அனைத்தும் 26ஆம் திகதி சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதே நாளிலிருந்து பயனாளிகள் தங்களது அஸ்வெசும கணக்குகள் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

