மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருந்தாளராக பணியாற்றும் ஊழியர்மீது, அதே வைத்தியசாலையின் மூன்று காவலாளிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவலின்படி, குறித்த மருந்தாளர் தனது வாகனத்தை வைத்தியசாலையின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தச் சென்றபோது, அங்கு வாகனம் நிறுத்த வேண்டாம் என காவலாளி ஒருவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதில் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காயமடைந்த மருந்தாளர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று காவலாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய இருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
2026-03-25

