ஈரானில் 25 நாட்களாக இணைய முடக்கம் – வரலாற்றில் நீண்டகால தடை.

ஈரானிய அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய இணைய சேவை முடக்கம் இன்றுடன் (மார்ச் 24) 25 ஆவது நாளை எட்டியுள்ளதாக சர்வதேச இணைய கண்காணிப்பு அமைப்பான ‘NetBlocks’ தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான இந்த இணைய முடக்கம் தற்போது 576 மணித்தியாலங்களைத் தாண்டியுள்ளது.
இது ஈரானிய வரலாற்றில் மிக நீண்ட கால இணைய முடக்கமாக பதிவாகியுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டமிட்ட முடக்கத்தினால் ஈரான் நாட்டு மக்கள் வெளிவுலகில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள் அல்லது அவசர அறிவிப்புகளைப் பெறுவதற்குக் கூட வழியின்றி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *