பொலன்னறுவையில் பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து – 12 பேர் காயம்.

பொலன்னறுவை மாவட்டத்தில், ஆலயம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலன்னறுவை – சோமாவதிய பிரதான வீதியின் சுங்காவில மற்றும் சோமாவதிய பகுதிகளுக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் 7.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பகுதிகளில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற குறித்த பேருந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நேரத்தில் பேருந்தில் 24 பேர் பயணித்திருந்த நிலையில், 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *