நகரத்தின் அரக்கர்களை வேட்டையாட வரும் ‘டிராகோஸ்’ போஸ்டர் வெளியீடு!

சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய அதிரடித் திரைப்படமான ‘டிராகோஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
“அரக்கர்கள் நிறைந்த நகரத்தில், ஒரு மனிதன் இதிகாசமாக மாறுகிறான்” (In a city of monsters, one man becomes the myth) என்ற பவர்ஃபுல்லான வாசகத்துடன் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஜே.ஜே. ஜென்சன் இப்படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த ஆக்ஷன் த்ரில்லர் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
நடிகர் அன் கிருஷ்ணா , ‘ஜெபா’ எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.
போஸ்டரில் கையில் கட்டுடன், ரத்தம் சொட்டச் சொட்ட அவர் இருக்கும் லுக் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இப்படத்திற்கு ஆரோஷ் கமிலஷ் இசையமைக்கிறார். எஸ்.எஸ். கேமல் ஒளிப்பதிவு செய்ய, கேமல் (Kemal) படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
KR FILMS மற்றும் K LOG PRODUCTION இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
டிராகோஸ் (DRAKOS) படத்தின் ‘புரோமோ வீடியோ’ (Promo Video) மிக விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் போஸ்டரிலேயே மருத்துவக் குறியீடு இடம்பெற்றிருப்பது, இது ஒரு மருத்துவ பின்னணி கொண்ட ஆக்ஷன் படமாக இருக்குமோ என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *