சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்!

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பறவைகள் சரணாலயம் பகுதிகளில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு குறித்த மணலினை அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி இரவு வேளைகளில் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக தர்மபுரம் பொலிஸாரால் நேற்று(28) அதிகாலை 02.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதிச்சோதனையின் மூலம் இரண்டு டிப்பர்கள் மற்றும் உழவு இயந்திரம் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதிகள் மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தடயப் பொருட்கள் எதிர்வரும் 03ம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *