ஜனநாயகத்துக்கும், மனித உரிமைகளுக்கும் எதிராகக் கொண்டு வரப்படுகின்ற இவ்வாறான சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது. அந்த அடிப்படையிலே பயங்ரகவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டு வரப்படுகின்ற பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமாக இருந்தாலும் சரி, எந்தவிதமான சட்டமாக இருந்தாலும் சரி மனித உரிமையை நேசிக்கின்ற ஜனநாயகத்தை நேசிக்கின்ற நாங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு எதிர்க்க வேண்டும். எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அதனைப் பல்வேறுபட்ட வடிவங்களில் முன்னெடுக்க வேண்டி இருக்கின்றது. எமது அடிப்படை அலகாக இருக்கின்ற உள்ளுராட்சி மன்றங்களில் தீர்மானங்களை கொண்டு வர வேண்டும். முக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும், சிவில் அமைப்புகள் இதற்கு எதிராக நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் கருத்தியல் ரீதியாக எதிர்க்க வேண்டும்.
அந்த அடிப்படையிலே இச்சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதுடன், பழைய சட்டத்தை மீண்டும் தொடராமல் இருப்பதற்கான வழிமுறைகைளையும் செய்ய வேண்டி இருக்கின்றது. தமிழ் பேசும் சமூகம் இதில் பெரிதும் பாதிப்புறுக்கூடிய மிகப் பெரிய பாதிப்பு இருக்கின்றது. எல்லோருக்கும் இது பொதுவான எதிர் சட்டமாக இருந்தாலும் கூட எமக்கான விடிவுகள் கிடைக்கப் பெறாமை தொடர்பில் நாம் எந்தவொரு வடிவிலும் சரி போராட்டத்தை முன்னெடுக்கும் போது அதனை நசுக்குவதற்காக எதிர்காலத்தில் இது பயன்படும்.
ஏதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இவ்வாறான விடயங்களை மிக வலிமையாக எதிர்த்து அச்சட்டத்தினை முழுமையாக ஒழிப்பதற்காக ஒன்று திரள வேண்டும்.
இதற்காக நாளைய தினம் (28)ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணியில் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் மாத்திரமல்ல, மனிதநேயத்தை நேசிப்பவர்கள், ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு மிகப் பெரிய எதிர்ப்பினைக் காட்ட வேண்டும் என்று அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன்.
மடஇச்சட்டத்தை இல்லாதொழிப்பதன் மூலம் எதிர்காலத்தில் சுபீட்சமான நம்பிக்கையான விடயத்தை உருவாக்குவதற்கான பயணம் தொடரும். இதில் மிகப் பிரதானமாக எமது கைகளில் இருக்கின்ற உள்ளுராட்சி மன்றங்களிலே எதிர்ப்பை தீர்மானங்களாகக் கொண்டு வர வேண்டும். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் ஊடாக நாங்களும் இந்த விடயத்தை எதிர்ப்போம். வெளியிலே ஜனநாயகத்தை நேசிக்கின்ற அமைப்புகள் பாரிய அழுத்தங்களை அரசுக்குக் கொடுப்பதன் மூலம் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் தொடராமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

