1979ம் ஆண்டு 06 மாதங்களுக்கு தற்காலிக சட்டமாகக் கொண்டு வரப்பட்டது. 47 வருட காலமாக அந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நாங்கள் ஆளப்படுகின்றோம். இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் சமூகமே. தற்போது அது முஸ்லீம்களையும், சிங்கள மக்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. எனவே இந்தச் சட்டம் கொண்டு வந்த காலத்தில் இருந்து இன்றுவரைக்கும் இதனை நீக்க வேண்டும் என தமிழர் உரிமைகளை வலியுறுத்துகின்ற அனைவரும் வலியுறுத்துகின்றார்கள்.
ஆனால் தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்ற ஒன்றை கொழுக்கட்டைக்கைக்குப் பதிலாக மோதகம் என்ற ரீதியில் கொண்டு வருகின்றார்கள். ஆனால் தற்போது கொண்டு வரப்படுகின்ற சட்டத்திற்கு முறையான வரைவிலக்கனம் இல்லை. வரைவிலக்கனம் ஒன்று இருந்தால் இந்த இந்த விடயங்களுக்குத் தான் கைது செய்வார்கள், தடுப்பார்கள் என்று சொல்ல முடியும். இது வரைவிலக்கனம் இல்லாத ஒன்றாக இருப்பதால் அரசுக்கெதிரான எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் பயங்கரவாதமாக மாற்றக்கூடிய வழி இருக்கின்றது.
தொழிற்சங்கப் போராட்டம், உரிமைசாந்த போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்மந்தமான போராட்டம், பண்ணையாளர்கள் சம்மந்தமான போராட்டம் என எந்தவொரு போராட்டத்தையும் பயங்கரவாதம் என்ற வியாக்கியானத்துக்குள் கொண்டு வந்து எங்களைக் கைது செய்வதற்குக், கட்டுப்படுத்துவதற்கு இச்சட்டத்தின் கீழ் தள்ளுவதற்கு வாய்ப்பிருக்கிக்நது.
இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படுகின்ற போதும் நாங்கள் எதிர்த்துதான் வாக்களிக்கப் போகின்றோம்.
எனவே எங்களடைய உள்ளுராட்சி மன்றங்களில் நாங்கள் இதற்குரிய எதிர்ப்பைக் காட்டக்கூடிய வகையில் இதற்கான தீர்மானங்களை நிறைவேற்றுதல் வேண்டும். நாங்கள் அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு பயங்கரவாதத் தடைச் சட்டங்களை எதிர்க்க வேண்டும். எங்களுக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டமும் வேண்டாம், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம். குற்றம் நடைபெறுமாக இருந்தால் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
மனித குலத்துக்கு, மனித உரிமைகளுக்கு எதிராக கொரூரமான சித்திரவதைகளை முன்னெடுத்த சட்டமாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் இருக்கின்றது. அதேபோன்று தான் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுக்காக்கும் சட்டமும் எதிர்காலத்தில் இதைவிட மோசமானதொரு சட்டமாகவே அமையும் என்பதால் எமது தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள் சகலரும் இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும்.
வெள்ளம் வருவதற்கு முன் அணைகட்ட வேண்டும். அது நிறைவேறினாலும் சரி நிறைவோறவிட்டாலும் சரி தமிழ் மக்கள் இதற்குரிய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். சபைகளிலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
நாளை (28) நடைபெறுகின்ற எதிர்ப்புப் போராட்டத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

