குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்!

எம்மில் பலரும் தற்போதைய சூழலில் ஜாதக கட்டங்களையும், நவகிரகங்களையும் துல்லியமாக அவதானித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆழிப் பேரலை – கொரோனா தொற்று-  ஆகிய பாதிப்புகளுக்கு பிறகு மக்கள் தங்களின் வாழ்க்கையில் சோதிடம் மற்றும் ஆன்மீகத்துடனான பார்வையையும் விசாலப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அபூர்வ கிரக சேர்க்கையை பற்றிய தகவல்களையும் அது தொடர்பான விழிப்புணர்வையும் ஆன்மீக முன்னோர்கள் எமக்காக பரந்த மனப்பான்மையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் இரண்டாம் திகதி வரை கும்ப ராசி மண்டலத்தில் சூரியன்-  செவ்வாய்-  புதன்- சுக்கிரன்- சனி -ராகு- என ஆறு கிரகங்கள் அபூர்வமாக இணைந்திருக்கிறது. உடனே எம்மில் பலரும் அச்சம் அடைவார்கள். இந்த அபூர்வ ஆறு கிரக இணைவு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துமோ..!? என கவலையும் கொள்வர்.

ஆனால் இந்த ஆறு கிரக இணைவு கோச்சார கணக்கின்படி பத்து முதல் பதினோரு நாட்கள் வரையே நீடிப்பதாலும், இவை அனைத்தும் குருவின் பார்வையில் இருப்பதாலும் அனைத்து ராசியினருக்கும் அதிர்ஷ்டம் ஏற்படும். ஒவ்வொருவருடைய சுய ஜாதகத்தை பொறுத்து அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாக – பெரும் நன்மையாக நிகழும்.

குறிப்பாக நீண்ட நாட்களாக திருமணத்தடை தடையை எதிர்கொண்ட மணமகன் – மணமகளுக்கு .. சிறிய அளவிலான இறை வழிபாட்டை மேற்கொண்டால் மண மேடையில் ஏறி மகிழ்ச்சியை காண்பார்கள்.

இவர்களைத் தொடர்ந்து திருமணம் ஆகியும் நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் கிடைக்காதவர்கள்… சிறிய அளவிலான இறை வழிபாட்டை மேற்கொண்டால்… புத்திர பாக்கியம் கிடைக்கும்.

வாழ்க்கையில் முன்னேற்றத்தை விரும்புபவர்கள் இந்த காலகட்டத்தில் குலதெய்வ வழிபாடு மற்றும் இஷ்ட தெய்வ வழிபாட்டை மனம் உருகி ஒரு முகமான மனதுடன் மேற்கொண்டால் இறைவனின் பரிபூரண ஆசி கிடைத்து முன்னேறுவீர். இந்த அபூர்வ கிரக சேர்க்கை தருணத்தை தவற விடாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *