‘பொம்மலாட்டம்’ படத்தில் ‘டிலக்ஸ்’ ஆக விதுசன்!

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சசிகரன் யோ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொம்மலாட்டம்’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வரவுள்ளது. போர்க்கால வடுக்களையும், அதன் பின்னணியில் உள்ள மனித உணர்வுகளையும் மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தின் மூலம் புதிய நட்சத்திரங்கள் அறிமுகமாகின்றனர்.
ஆரணி படைப்பகம் தயாரித்துள்ள இப்படத்தில், “விதுசன்” என்ற இளம் கலைஞர் “டிலக்ஸ்” என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
கதையோட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இவரது கதாபாத்திரம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மழலையின் அறிமுகத்தோடும், புதுமுகங்களின் உழைப்போடும் வரவிருக்கும் ‘பொம்மலாட்டம்’, தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியப் பதிவாக அமையும் என சினிமா விமர்சகர்களினால் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *