தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை!

அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற நிலைமையால் உலக சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு குறைந்து வருவதாக சர்வதேச நிதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பும், புதிய வரி நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளும் சந்தையில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படும் 170 பில்லியன் அமெரிக்க டொலர் வரி தொகை பற்றிய ஊகங்களும் டொலருக்கு அழுத்தமாக உள்ளது.
இதேவேளை, அமெரிக்கா–ஈரான் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி திரும்பியுள்ளனர். இதன் விளைவாக, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,150.22 அமெரிக்க டாலராக உயர்ந்து, கடந்த மூன்று வாரங்களில் இல்லாத உச்சத்தை பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *