மீனகயா ரயில் சேவை இன்று மீள ஆரம்பம்!

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீனகயா ரயில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

டிட்வா சூறாவளி காரணமாக தடைப்பட்டிருந்த மீனகயா ரயில் சேவை இன்று (23) முதல் மீள சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ரயிலவே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றிரவு 7 மணிக்கு கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீனகயா ரயில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியால் மட்டக்களப்பு ரயில் மார்க்கம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அந்த மார்க்கத்தின் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *