விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கணனி கூடம் திறந்து வைப்பு!

இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட கல்லூரியில் 20 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கணனி கூடம் திறந்து வைத்து மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சினால் கிளீனிங் சிறிலங்கா திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் கனிஷ்ட பாடசாலை மாணவர்களின் கணனி அறிவை மேம்படுத்து முகமாக மாணவர்களுக்கு கணினிகள் மற்றும் உபகரணங்களை கொண்ட புதிய கணனிக்கூடம் கையளிக்கும் இன்று(23) காலை இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு இலங்கை விமானப்படையின் மின்னணுவியல் மற்றும் கணினி பொறியியல் பணிப்பாளர் நாயகம் ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கணனி கூடத்தை இன்று திறந்து வைத்து மாணவர்களின் பாவனைக்காக கையளித்தார்.

மட்டக்களப்பு விமானப்படை முகாம் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ரன் ரஜீவன தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு மட்டக்களப்பு வலயக்கல்வி உயர் அதிகாரிகள், இப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *