ஆரணி படைப்பகத்தின் தயாரிப்பில், சசிகரன் யோவின் நேர்த்தியான இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொம்மலாட்டம்’. முற்றிலும் இலங்கைக் கலைஞர்களின் அயராத உழைப்பில், நம் மண்ணின் வாசனை சற்றும் குறையாமல் உருவாகியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் திரைக்கு வரவுள்ளது.
படம் வெளியாவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் கதை மாந்தர்களை படக்குழுவினர் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது “கேசவன்” என்ற முக்கிய கதாபாத்திரத்தில் “ஊரெழு பகி” (Urely Paghi) நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒவ்வொரு கதாபாத்திர அறிமுகமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் விண்ணைத் தொடச் செய்துள்ளது. தரமான படைப்பாக வெளிவரவுள்ள ‘பொம்மலாட்டம்’ இலங்கைத் திரைத்துறையில் ஒரு சிறப்பாக அமையும் என சினிமா விமர்சகர்களினால் எதிர்பார்க்கப்படுகிறது.


