இலங்கைத் திரைத்துறையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் நோக்கில், இளம் கலைஞர்களுக்கான ‘திரைப்பாசறை’ நடிப்புப் பயிற்சி முகாம் கடந்த ( 20) வவுனியா நெளுக்குளம் அரங்காலயா வளாகத்தில் தொடங்கியது.
நடிப்புத் துறையில் ஆர்வமுள்ள 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பல இளம் திறமையாளர்கள் இப் பயிற்சி முகாமில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
நடிப்புப் பயிற்சியின் அடிப்படை மற்றும் திரையுலகம் குறித்த ஆரம்பகட்ட விளக்கங்கள் வழங்கப்பட்டன. பங்கேற்பாளர்களின் ஒளிந்திருக்கும் தனித்துவமான நடிப்புத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஒரு நாள் பயிற்சியிலேயே இளைஞர்கள் மற்றும் யுவதிகளிடையே மிகப்பெரிய வரவேற்பும், கலையின் மீதான அதீத ஆர்வமும் காணப்பட்டது.
இன்று தொடங்கிய இந்தப் பயிற்சி முகாம் நேற்றிலிருந்து (22) 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. தெரிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்பாட்டுக் குழுவினரால் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவின் மண்ணிலிருந்து சர்வதேச தரத்திலான கலைஞர்களை உருவாக்கும் இந்த ‘திரைப்பாசறை’, எதிர்கால இலங்கைத் திரைத்துறையில் ஒரு முக்கிய பங்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

