பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி!

காலி, தடல்ல பகுதியில் இன்று  (22) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி  விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் காலி – கிந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் கிந்தோட்டை மற்றும் தடல்ல பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடைய இரு இளைஞர்கள் ஆவர்.

இரத்கம, பிந்தாலிய சந்தியில் விபத்துக்குள்ளான தமது நண்பர்கள் இருவரைப் பார்ப்பதற்காக கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த போதே இவர்கள் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இரத்கம விபத்திலும் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தடல்ல விபத்தில் காயமடைந்த இரு  இளைஞர்களும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *