மட்டு மாந்தீவுக்குள் நுழைந்த யானைகள்!

மட்டக்களப்பு மாந்தீவுக்குள் நுழைந்துள்ள யானைகள் இன்று(22) திருப்பெருந்துறை பிரதேசத்திற்குள்  அட்டகாசம் ஏற்படுத்திவருகின்றன.

கடந்த 5 தினங்களாக தொடர்ந்து யானைகள்  நெற்பயிர்கள் மற்றும் பயிர்களை நாசம் செய்வதாக பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர்.

இந்த யானை மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை எனவும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கையும் தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை வனஜீவராசிகள் திணைக்களமும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குறித்த யானைகளை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

12 யானைகளும் அருகில் உள்ள விமான நிலையத்தினுடாக மாந்தீவுக்குள் நுழைந்துள்ளன.

மீண்டும் இரவு வேளைகளில்   வருவது வழமையாக இருந்து வருகின்றது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் இரவு வேளைகளை அச்சத்துடன் கழித்துவருவதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *