ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (21) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 831 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 12 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 403 கிராம் ஹெரோயின், 01 கிலோகிராம் 213 கிராம் ஐஸ், 25 கிலோகிராம் 968 கிராம் கஞ்சா, 60,584 கஞ்சா செடிகள், 700 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 33 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 98 போதை மாத்திரைகள், 294 கிராம் 280 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 01 கிலோகிராம் 837 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

