எம்மில் ஒவ்வொருவரும் சனி பகவானின் பார்வைக்கு அச்சம் கொள்வார்கள். அதிலும் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி முதல் சனீஸ்வர பகவான் பூரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து அதாவது கும்ப ராசியில் இருந்து பூரட்டாதி நான்காவது நட்சத்திரம் அமையப்பெற்றுள்ள மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இதனால் சிலருக்கு ஏழரை சனியின் பாதிப்பும் அர்த்தாஷ்டம சனி கண்டக சனி என சனியின் பாதிப்புகளும் ஏற்படும். அதிலும் குறிப்பாக மீன ராசி மண்டலத்தில் சனியின் சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி விரைவில் பயணப்படுவதால்… அதன் தாக்கம் அதிகம் இருக்கும் என்பது உண்மை. இதனால் இத்தகைய பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான பிரத்யேக வழிமுறைகளை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் அருளியிருக்கிறார்கள்.
சனீஸ்வர பகவானின் நோக்கத்தை புரிந்து கொண்டவர்கள் தங்களுடைய வாழ்வியல் நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டு சனீஸ்வர பகவானின் அருளை பரிபூரணமாக பெறுவார்கள். சிலரால் தங்களது வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொள்ள இயலாத நிலையில்.. அவருடைய பாதிப்புகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இத்தகைய தருணத்தில் அவருடைய பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால்.. பிளாக் ஒபிசிடியன்– லாப்பிஸ் லசூலி– கிளியர் குவார்ட்ஸ் ஆகிய மூன்று வகையினதான கிரிஸ்டல் கற்களை ஆபரணங்களாக தயாரித்து அணிந்து கொள்ள வேண்டும். இந்த அரிய வகையினதான கிரிஸ்டல் கற்கள் சனி பகவானின் கதிர் வீச்சை உட்கிரகித்து அதனை நேர் நிலையான ஆற்றல் கொண்டவையாக உருமாற்றி உங்களுக்கு வழங்கும். இதன் மூலம் சனியின் பாதிப்பிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைக்கும்.

