திருமலை ரீட் மனுவை மீண்டும் அழைக்க நீதிமன்றம் உத்தரவு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி, அதன் விகாராதிபதி தாக்கல் செய்த ரீட் மனுவை ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 குறித்த விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாண வம்ச திஸ்ஸ தேரரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 அதன்படி, தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று(20) இந்த மனு அழைக்கப்பட்டது.

 இதன்போது, இந்த மனுவைச் சமரசமாகத் தீர்ப்பது குறித்த விடயங்களைப் பரிசீலிப்பதற்காக ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *