எம்மில் பலரும் ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கிறார்கள். உடல் ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் சோர்வில்லாமல் உழைக்கிறார்கள். இதன் காரணத்தினால் போதிய ஓய்வும், உறக்கத்தையும் மேற்கொள்வதில்லை . இதன் எதிரொலியாக அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. முதலில் பொதுவான பாதிப்பும், அதனைத் தொடர்ந்து பிரத்யேக உடல் உறுப்பு பாதிப்பும் உண்டாகிறது. இதற்கு வைத்தியர்களை சந்தித்து நிவாரண சிகிச்சைகளை மேற்கொண்டாலும், ஆன்மீக ரீதியாகவும் இதற்கான மாற்று உபாயத்தை பின்பற்றலாம் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
உங்களுடைய வீட்டிற்கு அருகே உள்ள அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கும் வைத்தியசாலைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் ஏழை எளிய மக்களுக்கு உங்கள் பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையில் ஒருவருக்கோ அல்லது சிலருக்கோ அன்னதானம் செய்து வந்தால்…. உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் மேற்கொள்ளும் சிகிச்சையின் வெற்றி வீதம் விரைவாகவும் , நிறைவாகவும் கிடைக்கும். சிலர் வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலையை வணங்கினாலும் ஆரோக்கியம் மேம்படும்.
இதனை நடைமுறைப்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால்… உங்கள் ஊருக்கு அருகே உள்ள அல்லது உங்களுக்கு அறிமுகமான பகுதியில் அமைய பெற்றிருக்கும் ஓடும் நதிகளில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் அல்லது வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் எல்லாம் நீராடினாலும் உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும்.

