மன அழுத்தத்தை குறைக்கும் வழிமுறை!

இன்றைய சூழலில் பாடசாலையில் பயிலும் பால்ய பிராயத்தினர் முதல் வெவ்வேறு வயதில் உள்ளவர்கள் அனைவரும் நாளாந்தம் உச்சரிக்கும் சொல்லாடல் ஸ்ட்ரெஸ்.

அமைதியான – இயல்பான – ஆரோக்கியமான மனநிலைக்கு எதிரான நிலை தொடர்ந்து தூண்டப்படுவதாலும்,  எம்முடைய எண்ணங்களில் சுயநலமும், பேராசையும் ஆக்கிரமிப்பதால் மனமானது சமநிலை தவறுகிறது.

அத்துடன் கவனச் சிதறல், காட்சி வழி நுகர்வு ஆகியவை இயல்பான அளவை விட கூடுதலாகி வருவதால் மன அமைதி என்பது குறைய தொடங்குகிறது. இந்நிலையில் இத்தகைய பாதிப்பு குறைவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.

உங்களுடைய ஊருக்கு அருகில் பக்தர்களாலோ அல்லது ஆலய நிர்வாகத்தினராலோ கவனிக்கப்படாமல் இருக்கும் விநாயகரை ‘வறண்ட விநாயகர்’ என குறிப்பிடுவார்கள்.

அத்துடன் கவனிப்பாரின்றி – பராமரிப்பின்றி வீதியோரத்தில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமைகளில் அல்லது உங்களுடைய பிறந்த கிழமைகளில் ஒரு குடம் நீரால் அபிஷேகம் செய்து, 21 முறை தோப்புக்கரணம் போட்டு விநாயகப் பெருமானை வணங்கினால். ஸ்ட்ரெஸ்  எனப்படும் மன அழுத்த பாதிப்பு குறையத் தொடங்கி நாளடைவில் மன மகிழ்ச்சி ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *