‘சூர்யா 48’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து!

சூர்யா நடிக்கவுள்ள படத்தினை அஸ்வத் மாரிமுத்து இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

‘டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தினையும் இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் உள்ளிட்டவை இன்னும் முடிவாகவில்லை.

இதனிடையே சிம்பு படத்தினை முடித்துவிட்டு, சூர்யா படத்தினை இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ரஜினியை சந்தித்து கூறிய கதையினை அப்படியே சூர்யாவுக்கு தகுந்தாற் போல் மாற்றி கூறியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. சூர்யாவுக்கு கதை மிகவும் பிடித்துவிடவே, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இறுதிகட்ட கதை விவாதத்தில் இந்தக் கூட்டணி முடிவாகும் என தெரிகிறது.

சூர்யா – அஸ்வத் மாரிமுத்து படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதா அல்லது சூர்யாவே தயாரிக்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும். தற்போது அவர், ‘சூர்யா 46’ படத்தினை முடித்து ‘சூர்யா 47’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆகையால் ‘சூர்யா 48’ படத்தின் இயக்குநராக அஸ்வத் மாரிமுத்து இருக்க வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *