“ஊடக ஒளிச்சுடர்” பட்டம் வழங்கிவைப்பு !

ஏறாவூர் 3ஏ சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்ட  விழாவின் போது சமூக முன்னோடிகள் வரிசையில் ஊடகத்துறையில் 33 வருடங்கள் அனுபவமுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஜி.ஏ நாஸர் “ஊடக ஒளிச்சுடர்”  பட்டம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சனசமூக நிலையத்தின் தலைவர் எம். எஸ். எம். றூமி தலைமையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி பதில் ஆணையாளருமான ஏ. எல். எம். அஸ்மி, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிகாறா மௌஜூத், மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம். ஆர். எப். றிப்கா, மற்றும் ஏறாவூர் நகர முதல்வர் எம். எஸ். நழீம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *