‘மக்கள் செல்வன்’நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக்!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘பாக்கெட் நாவல்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகை வாமிகா கபி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளி தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் ‘பாக்கெட் நாவல்’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை டைலர் டர்டன் & கினோ ஃபிஸ்ட் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ‘சூப்பர் டீலக்ஸ்’ எனும் படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவும் இணைந்திருப்பதும் … இவர்களுடன் ராஜ் பி ஷேட்டி – கிஷோர் என நடிப்பில் தனித்துவத்தை வெளிப்படுத்தும் நட்சத்திர கலைஞர்கள் இணைந்திருப்பதும், படத்திற்கு ‘பாக்கெட் நாவல்’ என பெயரிடப்பட்டிருப்பதும்.. இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும், ஆர்வமும் ரசிகர்களிடத்தில் எழுந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *