குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கான அறிவிப்பு!

கொழும்பு நகர மறுமலர்ச்சி திட்டத்தின் ஊடாக 2026ஆம் ஆண்டுக்குள் குறைந்த வருமானம் பெறும், நிரந்தர வீடு அற்ற குடும்பங்களுக்கு சுமார் 2,500 நகர்ப்புற வீடுகளை வழங்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு துரிதமாக அவை செயற்படுத்தப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்படும் ‘ஸ்டேடியம்கம’ வீட்டுத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை பிரதி அமைச்சர் ஆய்வு செய்வதற்கான செய்துள்ளார். இதன்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, மக்கள் தற்போது வசிக்கும் நகர்ப்புற வீட்டுத் தொகுதிகளில் தீர்க்கப்பட வேண்டிய பல சிக்கல்கள் உள்ளன. அவை வீடுகளை விட குடிசைகள் போல மாறிவிட்டன.

ஒரு வீட்டை ஒப்படைக்கும்போது, ஒரு கட்டிடம் மட்டுமல்ல, வாழக்கூடிய ஒரு குடியிருப்பையும் வழங்க வேண்டும். கட்டிடம் மாத்திரமன்றி, அதனுடன், சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றும் ஒரு குடியிருப்பை வழங்குவதில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *