“வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” விழிப்புணர்வு கண்காட்சி!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் நோக்கில் “வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்வு நடைபெற்று வருகிறது.

கடந்த 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்காட்சி இன்று(16) இறுதி நாள் வரை நடைபெறும். மாலை 6.00 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும். கூடம், புதிய வீதி, மட்டக்களப்பு (ஆணிவேர் உணவகத்திற்கு அருகில்) இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சமூகத்தில் அதிகரித்து வரும் பாலின அடிப்படையிலான வன்முறைகள், குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிகழ்வு உலகளாவிய “One Billion Rising” இயக்கத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *