அக்குரேகொட இரட்டைக்கொலை;திருமலையில் போராட்டம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட மிலேச்சத்தனமான சம்பவத்தைக் கண்டித்து, திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் இன்று (16) முழுமையான நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

நாடு தழுவிய எதிர்ப்பு: இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தீர்மானத்திற்கு இணங்க இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
​கறுப்புப் பட்டி போராட்டம்: திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் புண்ணியவதி துஷ்யந்தன் தலைமையில், சட்டத்தரணிகள் கறுப்புப் பட்டி அணிந்து தமது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.
திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கச் செயலாளர் எம். எச். எம். ராபின் நெறிப்படுத்தலின் கீழ் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
​போராட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த தலைவர் புண்ணியவதி துஷ்யந்தன்,
​”சட்டத்தின் ஆட்சிக்காகப் போராடும் ஒரு சட்டத்தரணிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை கவலையளிக்கிறது. இந்த ‘கொலை கலாசாரம்’ உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்!” என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *