இந்துப் பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நேற்று (15 )விசேட சிவபூஜை நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பக்தர்களுடன் சேர்ந்து இந்த பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஆலய நிர்வாகமும் பக்தர்களும் இணைந்து தீபம் ஏற்றல், அபிஷேகம் மற்றும் சிவபூஜை நிகழ்வுகளை ஒழுங்காக நடத்தினர்.
இந்த விழா மக்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆன்மிக உணர்வையும், சமூக இணைப்பையும் ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

