கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.ஃ அஸ்ரப் வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு குழு மீளமைப்பும் அங்குரார்ப்பண நிகழ்வு, பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று(12) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீனின் வழிகாட்டலில், பிரதி அதிபர் எப்.எம்.ஆர்.ஹாதிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தரம் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பாடசாலையின் ஒழுக்கம் மற்றும் வழிகாட்டல் ஆலோசனைப் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம். றிபாஸ் அவர்கள் நிகழ்வை முழுமையாக நெறிப்படுத்தினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் உரையாற்றிய பிரதி அதிபர், தற்போதைய சவால்கள் நிறைந்த சமூக சூழலில் மாணவர்களின் பாதுகாப்பையும் ஒழுக்கத்தையும் பேணுவதில் சிறுவர் பாதுகாப்பு குழுவின் முக்கியத்துவத்தை விளக்கினார். மாணவர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

