தேசிய கெடட் படையணியின் பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்பு!

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலய கெடட் பிரிவு மாணவர்கள், தேசிய கெடட் படையணி 38வது படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஒரு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களை பாடசாலை அதிபர் ஜஃபர், பிரதி அதிபர்கள் லாபீர் மற்றும் ரோஷன் டிப்ராஸ், தரம் 11 பகுதி தலைவர் இர்ஷாத், பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நுஸ்கி ஆகியோர் நேரில் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
மாணவர்களின் தன்னம்பிக்கைமிக்க முயற்சிக்கு அவர்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
பயிற்சி முகாமின் முக்கிய அம்சங்களாக தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்துதல், இராணுவ ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நேர மேலாண்மை திறனை வளர்த்தல் மற்றும் உடல் வலிமையை உயர்த்தும் பல்வேறு களப்பயிற்சிகள் இடம்பெற்றன.
இப்பயிற்சிகள் அனைத்தும் தேசிய கெடட் படையணியின் 38வது படைப்பிரிவினரால் திறம்பட முன்னெடுக்கப்பட்டன.
மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட பொறுப்பாசிரியர் மேஜர் சிப்லிக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *