கடவுச்சீட்டு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் !

கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தொழிநுட்ப அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடைநிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
தொழிநுட்ப அமைப்பு சரிசெய்தவுடன் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
தொழிநுட்ப அமைப்பை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *