“பொலிஸாரை கைது செய்” என சவப்​பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்!

அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (12)  இடம்பெற்றது.

அதன் பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சவப்​பெட்டியுடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *