பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தானியங்கி நீர் விநியோகம்!

யாழ்ப்பானம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் ரூ 2.5 மில்லியன் செலவில் தானியங்கி நீர் விநியோக மைய்யம் இன்று திறந்து வைக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று ஞாயிற்று கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியாட்சகர் தலைமையில் மருத்துவனை கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வடமராட்சியில் 1992 ம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை அணியினரின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட தன்னியக்க கட்டுப்பாட்டு முறையிலான நீர் விநியோக தொகுதி கையளிக்கும் நிகழ்வில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள், தாதியர், மற்றும் மருத்துவமனை உத்தியோகத்தர்கள், வடமராட்சியில் 1992 ம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை அணியினரின் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *