திருகோணமலை, மொரவெவ- அவ்வைநகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு (வாய்வெடி) உட்கொண்ட நிலையில் யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று(07) உயிரிழந்த நிலையில் யானை ஒன்று இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த கிரித்தல வனவிலங்கு திணைக்கள வைத்தியர் கலிங்க ஆராய்ச்சி விசாரணையை முன்னெடுத்தார்.
இதன் போது வாயில் காயம் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டதோடு, வாய் வெடி உட்கொண்டமையினாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாகவும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

