மூத்த பத்திரிகையாளரும் ஆசிரியருமான
அமரர் பாரதி இராஜநாயகம் அமரத்துவம் அடைந்ததன் ஓராண்டு நினைவு வணக்கக் கூட்டம், இன்று (7), யாழில் ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற்றது.
மூத்த பத்திரிகையாளர் தேவகௌரி தலைமையில் நடைபெற்ற இந்நினைவு நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறைப் பேராசிரியர் எஸ். ரகுராம், டான் ஊடக குழுமத்தின் தலைவர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் குகநாதன் ஆகியோர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

பாரதி இராஜநாயகம் அவர்கள் தமிழ் பத்திரிகைத்துறையில் ஆற்றிய பங்களிப்புகள், அவரது அரசியல் கட்டுரைகளின் ஆழம், சமகால அரசியல் விவகாரங்களை அணுகிய முறைகள் ஆகியவற்றை நினைவுகூர்ந்து உரைகள் இடம் பெற்றன.

இந்நிகழ்வு, பாரதி இராஜநாயகம் அவர்களின் பத்திரிகைத்துறை மரபையும் சிந்தனைப் பாரம்பரியத்தையும் மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது.

