6-வது முறையாக செம்பியன் பட்டம் கைப்பற்றிய இந்தியா!

19 வயதிற்குட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, சிம்பாப்வே நாட்டின் ஹாராரே நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தின் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ஓட்டங்களை குவித்தது.
வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 பவுண்டரிகள், 15 சிக்சர்களுடன் 175 ஓட்டங்களை பெற்றார்.
அணித் தலைவர் ஆயுஷ் மாத்ரே 53 ஓட்டங்கள் சேர்த்தார்.
பின்னர் 412 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ஓட்டங்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
.
இங்கிலாந்து அணியில் Caleb Falconer 115 ஓட்டங்களையும், Ben Dawkins 66 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதனையடுத்து இந்திய அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பந்து வீச்சில் இந்திய அணிக்காக
• RS Ambrish – 3 விக்கெட்டுகள்
• Deepesh Devendran – 2 விக்கெட்டுகள்
• Kanishk Chouhan – 2 விக்கெட்டுகள்
வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 6-வது முறையாக இளையோர் உலகக் கிண்ண செம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *