நாட்டை புரட்டிப்போட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192 கோடி) ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் தற்போது அந்தந்த மாவட்ட செயலாளர்கள் ஊடாகப் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக, அரசாங்கத்தினால் ஒரு மாணவருக்கு மொத்தம் 25,000 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், திறைசேரியிலிருந்து 15,000 ரூபாவும் மற்றும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
இதற்கமைவாக நேற்று(06) கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கண்டாவளை பிரதேச செயலகத்தில் இவர்களுக்கான காசோலை வழங்கப்பட்டது. அத்துடன் டித்வா புயல் காரணமாக சேதம் அடைந்த வீடுகளை முயல் புடவைப்பதற்கான நிதியின் முதல் கட்டமாக மூன்று இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் குறித்த நிகழ்வின்போது வழங்கப்பட்டது.
கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக பாதிக்கப்பட்டு மாணவர்களுக்கு அரசினாலே கடந்த வருடம் 6081 மாணவர்களுக்கு 15,000 ரூபாநிதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக தற்போது ஜனாதிபதி செயலகத்தினாலே ஒரு மாணவருக்கு தலா 10,000 வீதம் 6081 மாணவர்களுக்கு அந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு கண்டாவளை பிரதேச செயலகத்திலே முதற்கட்டமாக 300 மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டிருக்கின்றது.
தொடர்ச்சியாக ஏனைய மாணவர்களுக்கும் அந்த நிதி அவர்களுடைய வங்கிக் கணக்கிலே வைப்பிடப்படவுள்ளது. அதற்கு அப்பால் வெள்ளம் காரணமாக தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்த பாதிப்படைந்தவர்கள் எங்களுடைய மாவட்டத்தை சேர்ந்த 71 தொழில் முயற்சியாளர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் வரையான நிதி உதவி கிடைக்கப்பெற்றிருக்கின்றது. நட்டயீட்டுக்கொடுப்பனவாக அதனுடைய ஆரம்பக்கட்டமாக கண்டாவளை பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது.
ஏனையவர்களுக்கான குறித்த நிதி உதவி அவர்களுக்கான நிதி அவர்களுடைய வங்கி கணக்கிலே வரவு வைக்கப்படும். அதற்கு அப்பால் கடந்த வருடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக வீடு சேதமடைந்த 977 குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாய் வரையிலான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு ஒரு பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதனுடைய முதல்கட்டம், 3 இலட்சம் ரூபாய் பணத்திக்கான காசோலை கண்டவளை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதேபோல ஏனைய பிரதேச செயலகங்களில் விரைவாக இந்த நிதி அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணிய முரளிதரன் தெரிவித்தார்.

