பாதாள உலக நபர்கர்களின் இரகசியக் குரல் பதிவு சமூக ஊடகங்களில் கசிவு!

வெளிநாட்டில் இருக்கும் நான்கு முக்கிய பாதாள உலக நபர்களுக்கு இடையேயான குழு தொலைபேசி உரையாடலின் ஓடியோ பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருவதை பொலிஸார் கவனித்துள்ளனர்.

அவர்கள் தங்கள் எதிர்காலத் திட்டங்கள், குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்து விவாதித்து வருகின்றனர்.

சுமார் 22 நிமிடங்கள் நீடிக்கும் இந்த உரையாடலில், ரஸ்ஸல் ஸ்மித், பிரான்சிஸ் ரூபன், இங்கிலாந்தைச் சேர்ந்த குடு லால் மற்றும் வெல்லே சாரங்க ஆகிய நான்கு குற்றவாளிகளும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

துபாயில் கைது செய்யப்பட்ட வெல்லே சாரங்காவை துபாயில் பொலிஸார் மோசமாக நடத்தியதன் அடிப்படையில், இலங்கைக்கு வரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள் மீது தாக்குதல்களைத் தூண்டும் இலங்கையில் உள்ள தனது கூட்டாளிகள் குறித்து ரஸ்ஸல் ஸ்மித் இந்த உரையாடலில் ஒரு வெறுக்கத்தக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *