இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தின நிகழ்வுகள் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நேற்று (04) இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீட
பேராசிரியர் கலாநிதி எம்.சி.ஏ. நாஸர்,
சுதந்திர தின சிறப்புரையாற்றினார்.
பிரதேசத்தில் அனைத்து பள்ளிவாயல் ஒன்றிய சம்மேளன தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.ராசிக் விஷேட உரையினை நிகழ்த்தினார்,
இந்நிகழ்வில், ஆயுர்வேத மருத்துவர் ஏ.நளீம், கணக்காளர் எம். ஐ. எஸ்.சஜ்ஜாத், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம்.ஷாஹித், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ. எம்.தாஹிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீட், பதவி நிலை உதவியாளர் எம்.ஜமீல், மற்றும் பிரதேச செயலக ஏனைய உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் 101 வயதுடைய சிரேஷ்ட பிரஜை கெளரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.
அத்துடன் சுதந்திர தின விஷேட நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை மேடையேற்றி திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கான பரிசில்கள் அதிதிகளால் வழங்கப்பட்டன.


