மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாததால் நாட்டில் தற்போது மாகாண அமைச்சர்கள் இல்லை, ஆளுநர்களே விடயங்களை கவனித்து வருகிறார்கள்.ஆகையால் ,அவசரமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துங்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் செவ்வாய்க்கிழமை (3) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கூறினார் .
“தித்வா” சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் தெல்தோட்டை பிரதேச மற்றும் கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட சேதமடைந்துள்ள பாடசாலைகளை மதிப்பீடு செய்வதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் இதுவரை வராததையும்,அமைச்சினால் போதிய நடவடிக்கை எடுக்கப்படாததையும் சுட்டிக்காட்டும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

