உன்னிச்சை நீர் உள்ளெடுப்பகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
உன்னிச்சை நீர் உள்ளெடுப்பகத்தில் நீர் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் பிரதான பம்ப் இயந்திரம் ஒன்று திடீரென செயலிழந்ததே இந்தத் தடையிற்குக் காரணமாகும். இதனைச் சீர்செய்யும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை பின்வரும் நீர் வழங்கல் திட்டப் பகுதிகளில் நீர் விநியோகம் வழமை போன்று இருக்காது எனவும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் பகுதிகள்:
மட்டக்களப்பு மாநகரப் பகுதிகள்
இருதயபுரம், கல்லடி
ஏறாவூர், காத்தான்குடி, செங்கலடி
ஆரையம்பதி, கொக்கட்டிச்சோலை
வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி, வவுணதீவு
இந்தத் திடீர் தடையைக் கருத்திற்கொண்டு, நீர் விநியோகிக்கப்படும் நேரங்களில் பொதுமக்கள் தமக்குத் தேவையான நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், நீரை வீண் விரயத்தைத் தவிர்த்து, மிகவும் சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


