புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞனின் பாதணி கிணற்றினுள் மீட்பு!

புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்பவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று(25) இரவு சுமார் 7.30 மணியளவில், குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞனை ஏற்றிச் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது அம்மாவால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காணாமல் போன குறித்த இளைஞனின் வீட்டிற்கு அருகாமை உள்ள விடியல் விளையாட்டு மைதானத்தில் உள்ள கிணற்றுக் கட்டில் குறித்த இளைஞனின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதுடன் கிணற்றுக்குள் குறித்த இளைஞருடையதாக கருதப்படும் பாதணி ஒன்று காணப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக தேடுதல், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *