வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையில் தரம் 6 புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

புதிய கல்வி ஆண்டில் தரம் – 6 இல்வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையில் இணைந்து கொண்ட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்றைய தினம்  (21) ப பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.பி.எம். அன்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக், வாழைச்சேனை வை. அஹமத் வித்தியாலய, ஹைராத் வித்தியாலய அதிபர்கள், அந்நூர் தேசிய பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதி அவர்களை கெரவித்து அந்நூர் தேசிய பாடசாலை அதிபரினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை புதிதாக இணைந்து கொண்ட மாணவர்கள் பூ மாலை அணிவித்து, இனிப்புப் பண்டங்கள் வழங்கி வரவேற்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.

தரம் 06ல் இணைந்து கொள்ளும் புதிய மாணவர்களுக்கான வகுப்பறையும் திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *