இலங்கை மட்டக்களப்பு ஏத்தாலைக்குளத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் இலட்சக்கணக்கான புலம்பெயர் வலசை பறவைகள் வருகை தந்துள்ளன.
குளிர்கால மாதங்களில் (டிசம்பர், ஜனவரி போன்ற) மாதத்தில் அதிகளவிலான பறவைகளைக் காணலாம். பறவைகள் இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து, குஞ்சுகளுக்கு உணவளித்து வளர்க்கின்றன.
நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் பறவைகளைப் காணலாம். பின்னர் ஏப்ரல், மே மாதங்களில் தன் குஞ்சுகளுடன் மீண்டும் உரிய நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றன.
இது மட்டக்களப்பின் முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். பறவைகளின் இனப்பெருக்கத்தைப் பார்ப்பதற்காக உள்ளூர் சுற்றுலாப் பிரயாணிகள் அதிகளவிலானோர் பார்வையிட்டு வருவதும் உண்டு. இயற்கை அமைந்த இந்த சுற்றுச்சூழல் பறவைகளுக்கு முக்கிய வாழ்விடமாகவும் சொர்க்கமாக கருதப்படுகின்றது.

